NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
    தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

    குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    30.09.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    01.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    02.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 3-6ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    03.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    04.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    05.10.2024 மற்றும் 06.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை

    சென்னை மற்றும் பறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மீனவர்களைப் பொறுத்தவரை, 30.09.2024 மற்றும் 01.10.2024 அன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

    pic.twitter.com/VVyGrxoXEq

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழகம்

    6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித்துறை
    திராவிட உடன்பிறப்புகளுக்கு ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓணம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை அறிக்கை

    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகம்
    9 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    சில தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025