NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 06, 2024
    04:09 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

    தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    06.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 7-8ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    07.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    08.10.2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 9-10ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    09.10.2024: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 11-12ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    11.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    12.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்கள்

    மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை

    06.10.2024 மற்றும் 07.10.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    08.10.2024 முதல் 10.10.2024 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

    pic.twitter.com/VYfuYsefRq

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    வானிலை அறிக்கை

    தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  டெல்லி
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை  இந்தியா
    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளா
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025