இன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் உருவான காற்றழுத்த சுழற்சி காரணமாக, நேற்று தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதே போல, வட மாவட்டங்களில், சென்னையும், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று மிதமழை பெய்தது.
இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#வானிலைசெய்திகள் | மாநிலம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை#SunNews | #TNRain | #Kallakurichi pic.twitter.com/ACfiYl5IzW
— Sun News (@sunnewstamil) March 12, 2025
வெப்பநிலை
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டதாகவும், உள் மாவட்டங்களில் 90 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது.
கோவை, தர்மபுரி, மதுரை, நாகை, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
17ம் தேதி வரை தமிழகமும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது தென் மாவட்டங்களில் மழை பெய்யும் காரணத்தால், வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.