Page Loader
கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்

கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2024
12:30 pm

செய்தி முன்னோட்டம்

விடுமுறை அறிவிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்கிறது. கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு அரை நாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தமது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post