Loading...
பாஜக அமைச்சரவையில் திமுக? டெல்லியில் தீவிரமாகும் பேச்சுவார்த்தை
பாஜகவுடன் கூட்டாட்சி முறையில் இணக்கம் நிலவினாலும், கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

பாஜக அமைச்சரவையில் திமுக? டெல்லியில் தீவிரமாகும் பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, மாநிலத்தின் அரசியல் சூழலில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொகுதி வரையறை மசோதாவில் சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்தது, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்புகளில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்றது போன்ற நிகழ்வுகள் திமுக-பாஜக இடையேயான இணக்கமான போக்கைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. மேலும், "அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை" என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உறவு

காங்கிரஸ் உறவு முறிவும் பாஜக நட்பும்

பாஜகவுடன் கூட்டாட்சி முறையில் இணக்கம் நிலவினாலும், கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என எம்பி கனிமொழி தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், காங்கிரஸுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், தேசிய அளவில் ஒரு வலுவான கட்சியின் ஆதரவு திமுகவுக்கு தேவையாக இருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

மத்திய அரசுடன் இணக்கமாகசெயல்படுவது தொடர்பான முடிவை கட்சியின் தலைமையே எடுக்கும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரிவாக்கம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

பிரதமர் நரேந்திர மோடி சில அமைச்சர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிட்டுள்ளதால் இந்த அமைச்சரவை மாற்றம் தீவிரமடைந்துள்ளது.

இதில் திமுக இடம்பெறுமா அல்லது வெறும் வெளிப்படைத் தன்மையிலான அரசு அளவிலான உறவாக மட்டும் நீடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

ADVERTISEMENT