சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலிலிருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திர மாநிலம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இந்த அமைப்பின் தாக்கத்தால், இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வானிலை அறிக்கை
நவம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளுக்கான மழை எச்சரிக்கை
இது தவிர இன்று, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 24-ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
நவம்பர் 25-ஆம் தேதி மழைப் பொழிவு மேலும் விரிவடைந்து தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.