Loading...
கணிதம் மற்றும் கோடிங்கை ஏஐ கைப்பற்றினால் மனிதர்கள் இயற்கை மற்றும் வேத சாஸ்திரங்களை நோக்கித் திரும்புவார்கள்: ஸ்ரீதர் வேம்பு
கணிதம், கோடிங்கை AI கைப்பற்றினால் மனிதர்கள் இயற்கை மற்றும் வேத சாஸ்திரங்களுக்குத் திரும்புவார்கள் என ஸ்ரீதர் வேம்பு கருத்து

கணிதம் மற்றும் கோடிங்கை ஏஐ கைப்பற்றினால் மனிதர்கள் இயற்கை மற்றும் வேத சாஸ்திரங்களை நோக்கித் திரும்புவார்கள்: ஸ்ரீதர் வேம்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2026
10:49 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கணிதம் மற்றும் கோடிங் துறைகளை முழுமையாகக் கைப்பற்றினால் மனிதர்கள் வேத சாஸ்திரங்கள் மற்றும் இயற்கை சார்ந்த பணிகளுக்குத் திரும்புவார்கள் என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் சுப்பாராவ் கம்பம்பாட்டி எழுப்பிய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார். தொழில்நுட்பப் புரட்சிகளால் அறிவுசார் தொழிலாளர்கள் முதன்முறையாக தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை இழக்கும் அச்சத்தை எதிர்கொள்வதாக ஆராய்ச்சியாளர் கம்பம்பாட்டி குறிப்பிட்டிருந்தார்.

விவசாயிகள் சந்தித்த மாற்றம்

இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் சந்தித்த மாற்றத்தை இப்போது புரோகிராமர்கள் சந்திக்கின்றனர்

இயந்திரமயமாக்கல் காலத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் தச்சர்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலை இப்போது கணிதவியலாளர்களுக்கும் புரோகிராமர்களுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது என ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வரிகள் கொண்ட கோடிங்கை எழுதுவதோடு சிக்கலான கணிதப் புதிர்களுக்கும் தீர்வு காண்கின்றன.

அதேசமயம் பொறியியல் பின்னணி இல்லாத தனது குழு உறுப்பினர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கேட் வடிவமைப்பை உருவாக்கியதையும் அவர் நேர்மறையான மாற்றமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை, வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் சாஸ்திரம்

ஏஐ யுகத்தில் மனிதர்களுக்கான நான்கு முக்கியப் பணிகள்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இயற்கை, வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் வேத சாஸ்திரங்கள் ஆகியவையே மனிதர்கள் செய்யும் முக்கியப் பணிகளாக இருக்கும் என ஸ்ரீதர் வேம்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கணினி சார்ந்த வேலைகளில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒருவர் பத்து பேரின் வேலையை செய்யும் சூழல் உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும் முன்பு மென்பொருள் பொறியாளர்களை நியமிக்க முடியாத தொழில்கள் இப்போது அவர்களைப் பணியமர்த்தத் தொடங்கும் என்பதால் புதிய வாய்ப்புகள் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT