LOADING...
"விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா..": 'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
GOAT படத்தில் கேமியோ ரோலில் விஜயுடன் நடித்த சிவகார்த்திகேயன்

"விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா..": 'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனது நடிப்பிற்காக கிடைத்த ரசிகர்களின் அன்பும் ஆதரவையும் குறித்து மனம் திறந்தார். அப்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் குறித்து அவர் கூறியது சிறப்பு கவனம் பெற்றது. "விஜய் சார்கூட நடித்த பிறகு, சிலர் என்னை 'குட்டி தளபதி', 'திடீர் தளபதி'னு கிண்டல் பண்ணாங்க. ஆனா விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; நானும் வாங்கியிருக்க மாட்டேன்," என்றார் அவர்.

ரசிகர்கள்

ரசிகர்களை சம்பாதிக்க வேண்டும்: சிவகார்த்திகேயன் உருக்கம்

"அஜித் சார் ரசிகர் மன்றத்தை கலைத்து பல வருடங்கள் ஆகி விட்டாலும், இன்னும் அவருக்குப் பின்னால் ரசிகர்கள் இருக்காங்க. அதே மாதிரி, ரஜினி சார், சிம்பு சார், தனுஷ் சார்னு பலருக்கும் ரசிகர்கள் இருக்காங்க.இது போன்ற உறவுகளை சம்பாதிக்க வேண்டியது தான் முக்கியம். தற்போது அதைப் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்," என பேசினார். இசை வெளியீட்டில், சமூக ஊடக விமர்சனங்கள், 'அமரன்' பட அனுபவம், ரசிகர்களின் காதல் என பல விஷயங்களை பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post