Loading...
கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; மணமக்களின் திருமண உடையை கவனித்தீர்களா?
கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

கிரீஸில் கோலாகலமாக நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; மணமக்களின் திருமண உடையை கவனித்தீர்களா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
08:05 am

செய்தி முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளரும், சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனும் கிரீஸில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் கிரீஸில் உள்ள 'ஃபோர் சீசன்ஸ் ஆஸ்திர் பேலஸ் ஏதென்ஸ்' விடுதியில் நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தீம்

தருண் தஹிலியானியின் பிரத்யேக ஆடைகள்

இந்த திருமண விழாவிற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானியின் உடைகளை இந்த தம்பதியினர் அணிந்திருந்தனர்.

ஐவரி-பீஜ் நிறத்திலான பட்டு குர்தா மற்றும் வேட்டியுடன், எம்பிராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட நீண்ட ஜாக்கெட்டை அணிந்து கிளாசிக் மற்றும் ராயல் தோற்றத்தில் அனிருத் தோன்றினார்.

பிளஷ்-பிங்க் நிறத்திலான 3D மலர் எம்பிராய்டரி மற்றும் மின்னும் வேலைப்பாடுகள் கொண்ட லெஹங்காவில் காவ்யா தேவதை போல் அழகாகக் காட்சி அளித்தார்.

ஸ்டேட்மென்ட் சோக்கர் நெக்லஸ், காதணிகள் மற்றும் பிரீ ஹேர் உடன் அவர் தனது தோற்றத்தை நிறைவு செய்திருந்தார்.

இந்தத் திருமணத்திற்கான முழுமையான நிறத் தீம் 'பேஸ்டல்' நிறங்களிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிறப்பம்சங்கள்

கிரீஸ் திருமணத்தின் சிறப்பம்சங்கள்

மதச்சார்பற்ற முறையில் மாலை மாற்றிக் கொண்டு, மோதிரங்கள் அணிந்து எளிமையான அதே சமயம் பிரம்மாண்டமான முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.

கிரீஸில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

குறிப்பாக, அனிருத்தின் மாமாவும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அரசியல் தலைவர்களான மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

விருந்தினர்களுக்கான பிரத்யேக உணவு ஏற்பாடுகளை அருசுவை கேட்டரிங் நிறுவனம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வரவேற்பு நிகழ்ச்சி

நவம்பர் 21-இல் சென்னை வரவேற்பு நிகழ்ச்சி

கிரீஸ் திருமணத்தை தொடர்ந்து, வருகிற நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் கோலாகலமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரு வீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா, அரசியல், தொழில்துறை மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"My once in a lifetime, for a lifetime 11.11" என்ற க்யூட்டான குறிப்புடன் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT