NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை

    2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு குறிப்பாக இந்திய சினிமாவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய ஆண்டாக அமைந்தது.

    இருப்பினும், எதிர்பார்க்கப்படாத பல திரை பிரபலங்களின் மரணம், திரைத்துறையினரையும், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முள்ளும் மலரும் நடிகர் சரத்பாபு முதல், எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மாரிமுத்து வரை, இந்த ஆண்டில் உயிர்நீத்த முக்கியத் திரை பிரபலங்கள் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

    2nd card

    சரத்பாபு

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்த சரத்பாபு, உடல் நலக்குறைவால் தனது 71வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மே 22ம் தேதி காலமானார்.

    தமிழில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த, முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

    இவர், கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நிழலும் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    மாரிமுத்து

    கடந்த செப்டம்பர் 8ல் மாரடைப்பால் தனது 57 வயதில் காலமான மாரிமுத்துவின் இழப்பை, பெரும்பான்மையான தமிழ் குடும்பங்கள் தங்கள் வீட்டில் நிகழ்ந்த இழப்பாக நினைத்து வருந்தினர்.

    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில், ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இவர் பேசும் வசனங்களுக்காக, சமூக வலைதளங்களில் மிகப் பிரபலம் அடைந்தார்.

    பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்காக மக்கள் மனதில் பதிந்தார். அண்மையில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இவரின் கடைசி படமாக அமைந்தது.

    சினிமாவில் நல்ல நிலைமைக்கு வர பல ஆண்டுகள் கடுமையாக உழைத்த மாரிமுத்து, புகழின் உச்சியை எட்டியபோது திடீரென உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    4th card

    மயில்சாமி

    திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றிய மயில்சாமி, பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.

    தீவிர சிவபக்தரான அவர், சிவராத்திரி நாளில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்ச்சையாக போட்டியிட்டார்.

    தூள் படத்தில், திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபியை வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார் என்ற இவரின் நகைச்சுவைக்கு, சிரிக்காதவர்கள் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது.

    5th  ard

    மனோபாலா

    திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா, தன் வாழ்நாளில் இறுதி நாட்களில் ஏற்பட்ட கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், மே 3ம் தேதி காலமானார். அவருக்கு வயது 69.

    மணிவண்ணிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மனோபாலா, 1982ல் வெளியான ஆகாய கங்கை திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பெரிதான வெற்றியை பெறவில்லை.

    இரண்டு தசாப்தங்கள் நீடித்த இவரது இயக்குனர் வாழ்க்கையில், ரஜினி, விஜயகாந்தை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 2002ல் முழுநேர நடிகராக மாறி, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இயக்குனர், நடிகர் மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் மனோபாலா பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்குனராக அறிமுகமான, சதுரங்க வேட்டை திரைப்படத்தை இவர் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

    6th card

    வாணி ஜெயராம்

    தமிழ்நாட்டில் பிறந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் பிப்ரவரி மாதம் காலமானார். தமிழ் உள்ளிட்ட 19 மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    1971ல் ஹிந்தியில் அறிமுகமான வாணி ஜெயராம், 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில், வாலியின் எழுத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ள இவர், இந்த ஆண்டு பத்மபூஷன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    7th card

    கே விஸ்வநாத்

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 51 படங்களை இயக்கிய கே விஸ்வநாத், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தனது 92வது வயதில் உயிரிழந்தார்.

    பிரபல இயக்குனரான இவர் தமிழில் கமலஹாசன், ரஜினி, விக்ரம், விஜய், தனுஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    கமலஹாசனை வைத்து விஸ்வநாத் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய சலங்கை ஒலி திரைப்படம், இன்றளவிலும் கல்ட் கிளாசிக்காக வலம் வருகிறது.

    இவர் இயக்கிய ஸ்வாதி முத்யம் திரைப்படம், 56வது ஆஸ்கர் விருதுகளுக்காக, இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    8th card

    இ ராமதாஸ்

    தமிழ் சினிமாவில் வசூல்ராஜா, சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்த இ ராமதாஸ் உடல் நலக்குறைவால் இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி 23ஆம் தேதி காலமானார்.

    1981 ஆம் ஆண்டு வெளியான, எனக்காக காத்திரு திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகத்திற்கு ராமதாஸ் அறிமுகமானார்.

    பின்னர், ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் ஆகிய படங்களை இயக்கினார்.

    பின்னர் 1999ல் 14 இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய சுயம்வரம் திரைப்படத்தில், பாண்டியராஜன், ஊர்வசி தொடர்பான காட்சிகளை இவர் இயக்கியிருந்தார்.

    பின்னர் நடிகனாக மாறிய, தர்மதுரை உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    9th card

    டிபி கஜேந்திரன்

    தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகருமான டிபி கஜேந்திரன், சிறுநீரகத் தொற்றால் பிப்ரவரி மாதம் காலமானார்.

    இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த கஜேந்திரன், தனது குருநாதரை வைத்தே, வீடு மக்கள் மனைவி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

    பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், நல்ல காலம் பொறந்தாச்சு உள்ளிட்ட இவரது படங்களை, குடும்பங்கள் கொண்டாடி தீர்த்தது.

    இது மட்டுமின்றி ரஜினி, சத்யராஜ், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் காமெடியிலும் இவர் கலக்கியுள்ளார்.உயிரிழப்பதற்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து வீட்டிலிருந்த இவரை, கல்லூரி தோழர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    கமல்ஹாசன்
    விஜய்
    விக்ரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஜினிகாந்த்

    #VanniyarsBoycottRajinikanth - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் ட்விட்டர்
    #தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா? பாலிவுட்
    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  காவல்துறை
    ரஜினியின் 'லால் சலாம்' திரைப்படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்  ரெட் ஜெயின்ட் மூவீஸ்

    கமல்ஹாசன்

    இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ விஜய் டிவி
    KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் கமலஹாசன்
    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது டைட்டில் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்  தமிழ் சினிமா
    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது தமிழ் சினிமா

    விஜய்

    'லைக் போட்டது குத்தமாயா?!': விக்னேஷ் சிவனை வறுக்கும் நெட்டிஸன்கள்  விக்னேஷ் சிவன்
    'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார்  லியோ
    மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை தமிழ் திரைப்படம்
    எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது லியோ

    விக்ரம்

    மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது கோலிவுட்
    Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் கோலிவுட்
    'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் பிறந்தநாள்
    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025