
"நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தை முன்னிலைப்படுத்த, உலகம் முழுவதும் ஏழு அனைத்துக் கட்சிக் குழுக்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் கூறிய சில மணி நேரங்களிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ-சர்தாரி தலைமையிலான குழுவை முக்கிய வெளிநாட்டு தலைநகரங்களுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்லாமாபாத் வெளியிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை, காங்கிரஸ் தலைவர் சசி தரூர், திமுக MP கனிமொழி, பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் இராஜதந்திரிகள் அடங்கிய ஏழு இந்தியக் குழுக்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் முக்கிய தலைநகரங்களுக்குச் செல்ல உள்ளன.
திட்டம்
பாகிஸ்தானும் இதே போன்றதொரு திட்டத்தை மேற்கொள்ள போகிறது
இந்தியா மேற்கொள்ளவுள்ள இதேபோன்ற பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான பாகிஸ்தானின் திட்டங்களின் முதல் அறிகுறி சனிக்கிழமை மாலை பூட்டோ-ஜர்தாரியிடமிருந்து வந்தது.
அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தூதுக்குழுவை வழிநடத்த தன்னை அணுகியதாகக் கூறினார்.
"இன்று முன்னதாக பிரதமர் @CMShehbaz என்னைத் தொடர்பு கொண்டார், அவர் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் அமைதிக்கான வழக்கை முன்வைக்க ஒரு குழுவை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலும், இந்த சவாலான காலங்களில் பாகிஸ்தானுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன்," என்று பூட்டோ-சர்தாரி கூறினார்.
அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (PML-N) முக்கிய கூட்டணி கட்சியாகும்.
குழு
பாகிஸ்தான் குழு உறுப்பினர்கள் யார்?
பாகிஸ்தான் முன்மொழிந்ததாக கூறப்படும் இந்த தூது குழுவில், முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் குர்ராம் தஸ்த்கீர் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கான முன்னாள் தூதர் தாரிக் பாதெமியை, ரஷ்யாவிற்கு அனுப்பவும், பூட்டோ-சர்தாரி தலைமையிலான குழு ஐரோப்பாவிற்கு அனுப்பவும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இந்த குழு குறித்து பாகிஸ்தான் அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்றாலும், வெளியுறவு அமைச்சராக இருக்கும் துணைப் பிரதமர் இஷாக் டார், முக்கிய நாடுகளுக்குக் குழுவை அனுப்பும் திட்டத்தை உறுதிப்படுத்தினார்.