காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் காசா இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க, ஹமாஸ் விரும்புவதாக அக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஹமாசின் முயற்சிக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் இதுவரை வரவில்லை.
கிட்டத்தட்ட ஏழு வாரங்களை நெருங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போரில், பல்வேறு உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலில் நான்கு நாட்கள் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், பின்னர் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
இது மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கத்தார் மற்றும் ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில், போர் நிறுத்த நீட்டிப்பு குறித்த காலவரையறையை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
2nd card
போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தும் அமெரிக்கா
அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியதற்கு பின்னர், மூன்றாவது முறையாக இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் மற்றும் மேற்கு கரை அதிகாரிகளை சந்தித்தார்.
"போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்," என அவர் டெல் அவிவில் செய்தியாளர்களிடம் கூறினார். "எங்களுக்கு எட்டாவது நாள் மற்றும் அதற்கு மேலும் போர் நிறுத்தம் வேண்டும்" என்றார்.
மேலும், போரில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை தடுக்க, மனிதாபிமான மக்கள் பாதுகாப்பு திட்டங்களை வகுக்க இஸ்ரேலை வலியுறுத்தினார்.
தெற்கு மற்றும் மத்திய காசாவில் உள்ள பகுதிகள் மற்றும் இடங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் வரையறுப்பதின் மூலம், மக்கள் தாக்கப்படுவதை தவிர்க்கலாம் என பிளிங்கன் கூறினார்.
3rd card
8 பணயக் கைதிகள் விடுவிப்பு
ஏழாவது நாள் போர் நிறுத்தத்தில், 8 பணயக் கைகளை ஹமாஸ் விடுவித்தது. இவர்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் எகிப்தின் ரஃபா எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் இன்று விடுவிக்கப்பட வேண்டிய, 10 பணயக் கைதிகளின் மொத்த எண்ணிக்கையை எட்டியதை உறுதிப்படுத்தியது.
ஏனெனில், புதன்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு ரஷ்ய-இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்கள் இன்றைய எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலாக, 30 பாலஸ்தீன சிறை கைதிகளை இஸ்ரேல் தன்னாட்டு சிறைகளிலிருந்து விடுவித்துள்ளது.