Loading...
ஐபிஎல் 2027 மினி ஏலம்: டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் காலை 11 மணிக்கு தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 2027 வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2027 மினி ஏலம்: டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் காலை 11 மணிக்கு தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
03:35 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அன்றைய தினம் மதியம் 2.00 மணிக்கு பெங்களூருவில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளதால், ஏலம் காலை 11.00 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய், ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் கடந்த மூன்று ஏலங்கள் நடைபெற்ற நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்திய மண்ணுக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

184 வீரர்கள் தக்கவைப்பு 

ஏலத்தில் ₹297.95 கோடிக்கு 66 இடங்கள் காலி:

ஏலத்திற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளும் இணைந்து 55 வெளிநாட்டு நட்சத்திரங்கள் உட்பட மொத்தம் 184 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், 34 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 89 வீரர்களை விடுவித்துள்ளன.

தக்கவைக்கப்பட்ட வீரர்களுக்காக அணிகள் மொத்தம் ₹1,002.05 கோடியைச் செலவிட்டுள்ள நிலையில், மீதமுள்ள ₹297.95 கோடி கையிருப்புத் தொகையுடன் ஏலத்தில் 25 வெளிநாட்டு இடங்கள் உட்பட அதிகபட்சமாக 66 வீரர்களை வாங்கப் போட்டியிட உள்ளன.

முதலிடத்தில் லக்னோ

அணிகளின் கையிருப்புத் தொகை நிலவரம் 

அணிகளின் கையிருப்புத் தொகையைப் பொறுத்தவரை, 18 வீரர்களைத் தக்கவைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிகபட்சமாக ₹47.45 கோடி கையிருப்புத் தொகையுடன் (7 இடங்கள் காலி, 3 வெளிநாட்டு இடங்கள்) ஏலத்தில் களமிறங்குகிறது.

அதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ₹41.65 கோடியுடனும் (8 இடங்கள், 3 வெளிநாட்டு இடங்கள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ₹40.15 கோடியுடனும் (7 இடங்கள், 3 வெளிநாட்டு இடங்கள்), டெல்லி கேப்பிடல்ஸ் ₹39.50 கோடியுடனும் (9 இடங்கள், 4 வெளிநாட்டு இடங்கள்) வலுவான கையிருப்புத் தொகையை வைத்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி ₹32.60 கோடியுடன் (9 இடங்கள், 2 வெளிநாட்டு இடங்கள்) ஏலத்திற்குச் செல்கிறது.

ADVERTISEMENT

கையிருப்பு

அணிகளின் கையிருப்பு விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 வீரர்களை தக்கவைத்து ₹101.95 கோடியை செலவிட்டுள்ள நிலையில், மீதமுள்ள ₹28.05 கோடியுடன் 2 வெளிநாட்டு இடங்கள் உட்பட 6 வீரர்களை வாங்கவுள்ளது.

அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் ₹27.05 கோடியுடனும் (6 இடங்கள், 3 வெளிநாட்டு இடங்கள்), பஞ்சாப் கிங்ஸ் ₹18.60 கோடியுடனும் (6 இடங்கள், 2 வெளிநாட்டு இடங்கள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ₹14.15 கோடியுடனும் (5 இடங்கள், 1 வெளிநாட்டு இடம்) ஏலத்தில் பங்கேற்கின்றன.

அதிகபட்சமாக 22 வீரர்களைத் தக்கவைத்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, மிகக் குறைந்த கையிருப்பாக ₹8.75 கோடியுடன் 2 வெளிநாட்டு இடங்கள் உட்பட 3 இடங்களை மட்டுமே நிரப்பவுள்ளது.

ADVERTISEMENT

வீரர்கள் பட்டியல்

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்:

அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ், குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, முகேஷ் சவுத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ண கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஸ்ரேயாஸ் கோபால், உர்வில் படேல். (டிரேட்: ஜாக் எட்வர்ட்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன்).

டெல்லி கேப்பிடல்ஸ்:

அசுதோஷ் சர்மா, ஆகிப் தார், அக்சர் படேல், டேவிட் மில்லர், கே.எல். ராகுல், கைல் ஜேமிசன், லுங்கி இங்கிடி, மாதவ் திவாரி, முகேஷ் குமார், பிரித்வி ஷா, சமீர் ரிஸ்வி, திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம். (டிரேட்: ரிஷப் பந்த், ஜீஷான் அன்சாரி).

வீரர்கள் பட்டியல்

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள்

குஜராத் டைட்டன்ஸ்:

அனுஜ் ராவத், அசோக் சர்மா, கிளென் பிலிப்ஸ், குர்னூர் சிங் பிரார், ஜேசன்ஹோல்டர், ஜெயந்த் யாதவ், ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, குமார் குஷாக்ரா, மானவ் சுதார், முகமது சிராஜ், முகமது அர்ஷத்கான், நிஷாந்த் சிந்து, பிரசித் கிருஷ்ணா, ஆர். சாய்கிஷோர், ராகுல் தெவாட்டியா, ரஷித்கான், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், டாம் பான்டன், வாஷிங்டன் சுந்தர். (டிரேட்: ஹர்ஷல் படேல்).

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், கேமரூன் கிரீன், ஃபின் ஆலன், ஹர்ஷித் ராணா, கார்த்திக் தியாகி, மனிஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ரமன்தீப்சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், சார்த்தக் ரஞ்சன், சவுரப் துபே, சுனில் நரைன், டிம்செய்ஃபெர்ட், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

வீரர்கள் பட்டியல்

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:

அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, திக்வேஷ் ரதி, ஜோஷ் இங்லிஸ், மயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மொஹ்சின் கான், முகுல் சவுத்ரி, நிக்கோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது. (டிரேட்: சாம் கரண், குல்தீப் யாதவ்).

மும்பை இந்தியன்ஸ்:

அஸ்வனி குமார், கார்பின் போஷ், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சான்ட்னர், நமன் திர், குயின்டன் டி காக், ரகு சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், ஷர்துல் தாக்கூர், ஷெர்பேன் ரூதர்போர்ட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ். (டிரேட்: அர்ஷ்தீப் சிங்).

வீரர்கள் பட்டியல்

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள்

பஞ்சாப் கிங்ஸ்:

அஸ்மதுல்லா ஓமர்சாய், பென் துவார்ஷுயிஸ், கூப்பர் கொனொலி, ஹர்னூர் பன்னு, ஹர்பிரீத் பிரார், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யான்ஷ் ஷெட்ஜ், விஷ்ணுவினோத், வைஷாக் விஜயகுமார், சேவியர் பார்ட்லெட், யாஷ் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல். (டிரேட்: ஹர்திக் பாண்டியா).

ராஜஸ்தான் ராயல்ஸ்:

அமன் ராவ் பெராலா, பிரிஜேஷ் சர்மா, தசுன்ஷனகா, துருவ் ஜூரல், டொனோவன் ஃபெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரேபர்கர், ரவிபிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சந்தீப் சர்மா, சுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் ராஜ் புஞ்சா, யஷஸ்வி ஜெய்ஸ்வால். (டிரேட்: மணிமாறன் சித்தார்த், முகமது ஷமி).

வீரர்கள் பட்டியல்

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

அபிநந்தன் சிங், புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல், ஜேக்கப் டஃபி, ஜிதேஷ்சர்மா, ஜோர்டான் காக்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கனிஷ்க் சவுகான், குருனால் பாண்டியா, நுவான் துஷாரா, பில் சால்ட், ரஜத்படிதார், ரசிக் தார், ரொமாரியோ ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், விக்கி ஓஸ்ட்வால், விராட் கோலி, யாஷ் தயாள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, பிரைடன் கார்ஸ், ஈஷான் மலிங்கா, ஹர்ஷ்துபே, ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், கிரைன்ஸ் புலேத்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ், பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், சலில் அரோரா, ஷிவாங் குமார், ஸ்மரன் ரவிச்சந்திரன். (டிரேட்: கலீல் அகமது, நாதன் எல்லிஸ், டி. நடராஜன்).

ADVERTISEMENT