NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்
    பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது!

    பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 25, 2024
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜ வாழ்க்கையின் ஆடம்பரத்தையும் கம்பீரத்தையும் விரும்பாதவர்கள் உண்டா?

    அந்த ஏக்கத்தை போக்க இந்திய ரயில்வே அறிமுகம் செய்திருக்கும் ரயில் சேவை தான் 'பேலஸ் ஆன் வீல்ஸ்'.

    இந்திய ரயில்வேயின் முதன்மையான சொகுசு ரயில்களில் ஒன்றான 'பேலஸ் ஆன் வீல்ஸ்' பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

    இந்த ரயில் சேவை, ஜெய்ப்பூர் உட்பட ராஜஸ்தானின் பாலைவன நகரங்களுக்கு இடையே செல்லும்.

    இந்த ரயில் சேவையின் இந்தாண்டுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி விட்டது. இதன் விலை விவரங்கள், பயண விவரங்கள் உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ளுங்கள்

    இடங்கள்

    பயண இடங்கள்

    'பேலஸ் ஆன் வீல்ஸ்' ரயில், ஜெய்ப்பூரின் பிங்க் சிட்டி, ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர், சவாய் மாதோபூர், சித்தோர்கர், பரத்பூர், ஆக்ரா போன்ற முக்கிய இடங்களுக்கு பயணப்படும்.

    எட்டு பகல் மற்றும் ஏழு இரவு- நீண்ட ரயில் பயணம் டெல்லியில் இருந்து தொடங்குகிறது.

    மேலும் இந்த ரயில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தின் சுற்றுலா தலங்களை சுற்றிக்காட்டும்.

    அங்கிருக்கும் UNESCO இடங்கள், உள்ளூர் கலாச்சார மார்கெட்டுகள் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்தபின்னர், மீண்டும் டெல்லியை வந்தடையும்.

    முன்பதிவு

    முன்பதிவு விலை

    பேலஸ் ஆன் வீல்ஸின் டிக்கெட் விலையானது தேவை மற்றும் உங்கள் தங்கும் ரூம் அடிப்படையில் மாறுபடும்.

    அதேபோல பருவத்திற்கேற்றார் போலவும் மாறும். ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சாதகமான வானிலை இருப்பதால், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் சொகுசு ரயிலின் உச்சபட்ச சுற்றுலா சீசனாக கருதப்படுகிறது.

    அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான பேலஸ் ஆன் வீல்ஸின் குறைந்தபட்ச முன்பதிவு விலை ஒரு இரவிற்கு, இருவருக்கு ரூ.81008/- எனத்தொடங்கும்.

    செயல்முறை

    ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

    பேலஸ் ஆன் வீல்ஸ் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள், ரயில் சேவைகளின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.thepalaceonwheels.org இல் சென்று முன்பதிவு செய்யலாம்.

    அங்கே உங்கள் தேவைக்கான விருப்பத்தை தேர்வு செய்யவும். அடுத்தாக, புறப்படும் தேதிகளையும், பயணிகளின் எண்ணிக்கையும் தேர்ந்தெடுக்கவும் அடுத்ததாக பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்.

    இதனை அடுத்து, முன்பதிவு செயல்முறைக்கு ஒரு பயண நிபுணர் உங்களுடன் இணைவார்.

    உங்கள் பயணம் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின்னர், அவர் உங்களுக்கு பணம் செலுத்தும் வழிமுறையை கூறுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? ரயில்கள்
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்

    ரயில்கள்

    ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி ஜார்கண்ட்
    டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு  ரயில் நிலையம்
    உலகின் முதல் கார்பன் ஃபைபர் பயணிகள் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது சீனா
    உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம் ரயில் நிலையம்

    ராஜஸ்தான்

    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  சீனா
    தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர் தெலுங்கானா
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ் தெலுங்கானா
    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025