சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து கைது; ஏன்?
செய்தி முன்னோட்டம்
சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தான் கைப்பட எழுதியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, விஜய் கவர்னர் ரவியிடம் பெண்கள் பாதுகாப்பு சம்மந்தமாக கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.
அப்போது அவருடன் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக அக்கட்சி நிர்வாகிகள், விஜயின் அறிக்கையின் நகல்களை பூக்கடை பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி வளாகம் அருகிலுள்ள மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | சென்னை தியாகராய நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
— Sun News (@sunnewstamil) December 30, 2024
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்துள்ளார்.
அப்போது, முன் அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்காக புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவருடன்…
கைது
அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்கு கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள்
கட்சி நிர்வாகிகள் கூடியதை காவல்துறையினர் தடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் தவெக தொண்டர்கள் அந்த அறிவிப்புகளை தொடர்ந்து விநியோகித்தனர்.
இதனால், அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த புஸ்சி ஆனந்த், உள்ளே அடைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும்படி போலீசாரிடம் கோரினார், ஆனால் அதற்கு காவல்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதற்கு, புஸ்சி ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.