Page Loader
தமிழக ஆளுநர் RN ரவியிடம் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசியது என்ன?
RN ரவியை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் விஜய்

தமிழக ஆளுநர் RN ரவியிடம் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசியது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 30, 2024
03:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவனை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த நபர் திமுக-வைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, விஜய் இன்று கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கோரிக்கை 

ஆளுநரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்

கவர்னருடனான சந்திப்பு குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்". "மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட கவர்னர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post