Loading...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
04:48 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் - லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை கணிப்பு

நவம்பர் 12-க்கான மழைக் கணிப்பு

நவம்பர் 12 அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும்.

கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டம் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய வடகடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் வானிலை எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT