சட்டம் பேசுவோம்: தற்கொலையை குற்றமற்றதாக்குகிறதா புதிய குற்றவியல் மசோதாக்கள்?
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்காக புதிய மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்களில் தற்கொலை குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
பிஹண்டக்ட்ஜ்
IPC சட்டப்பிரிவு 309 என்ன கூறுகிறது?
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) மிக சிக்கலான விதிகளில் ஒன்றாக கருதப்படுவது IPC சட்டப்பிரிவு 309 ஆகும். இது தற்கொலை முயற்சியை குற்றம் என்று கூறுகிறது.
"தற்கொலை செய்ய முயற்சிப்பது மற்றும் அத்தகைய குற்றத்தை நிறைவேற்றும் நோக்கில் எந்தச் செயலை செய்தாலும், ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்." என்கிறது IPC சட்டப்பிரிவு 309.
ஆனால், ஏற்கனவே மன அழுத்தத்துடன் தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது அல்லது அபராதம் விதிப்பதை சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அப்படி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனையை வழங்குவது தான் சரியான விஷயம் என்று அவர்கள் வாதாடுகின்றனர்.
ஞ்சகோன்
இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலை வழக்குகள்
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், தற்கொலைக்கு முயற்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவும் மதத்திற்கு எதிரான குற்றமாகவும் கருதப்பட்ட காலத்தின் சிந்தனையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2020-2021 ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவில் தற்கொலையால் ஏற்படும் இறப்புகளின் சுமை 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது அந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலையால் உயிரிழந்துள்ளனர்.
பதிவுசெய்யப்பட்ட தற்கொலை வழக்குகள் பற்றிய தகவல்களை போலீஸாரிடம் இருந்து சேகரிக்கும் என்சிஆர்பி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளது.
டபிச
IPC சட்டப்பிரிவு 309யில் ஏற்பட்ட மாற்றங்கள்
1971ஆம் ஆண்டில், சட்ட ஆணையம் அதன் 42வது அறிக்கையில் IPC பிரிவு 309 ஐ ரத்து செய்ய பரிந்துரைத்தது.
இந்த நோக்கத்தை செயல்படுத்தும் வகையில், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி அரசாங்கம் IPC(திருத்தம்) மசோதா, 1978ஐக் கொண்டு வந்தது.
இந்த மசோதா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்சபாவால் அது அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
1996இல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் IPC பிரிவு 309 செல்லுபடியாகும் என்று வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், சட்ட ஆணையம், அதன் 210வது அறிக்கையில், தற்கொலை முயற்சிக்கு மருத்துவம் மற்றும் மனநல சிகிச்சை தான் தேவை, தண்டனை அல்ல என்று கூறியது.
டிவிஜ்க்க்ப்
2017 மனநல சுகாதார மசோதாவால் ஏற்பட்ட மாற்றம்
மார்ச் 2011 இல், உச்சநீதிமன்றமும் இந்த பிரிவை ஐபிசியில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்தது.
அதன் பின், 2017இல் நிறைவேற்றப்பட்ட மனநல சுகாதார மசோதாவின்(MHCA) மூலமாக தான் இதற்கு ஒரு வேறுபட்ட தீர்வு கிடைத்தது.
IPC பிரிவு 309 தற்கொலை முயற்சியை விதிவிலக்காக மட்டுமே தண்டிக்க முடியும் என்று MHCA சட்டம் கூறியது.
தற்கொலைக்கு முயற்சிக்கும் எந்தவொரு நபரும், கடுமையான மன அழுத்தம் இருப்பதாகக் கருதப்படுவார்கள். அதனால், விசாரணை மற்றும் தண்டனையின் கீழ் தண்டிக்கப்பட மாட்டார்கள்." என்று MHCA சட்டம் கூறுகிறது.
இதன்மூலம் புதிய வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், IPC பிரிவு 309 ரத்து செய்யப்படவில்லை. இதனால், அதற்கு பிறகு சட்டப்பிரிவு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை தண்டிக்க பயன்படுத்தப்பட்டது.
கஜசா
புதிய குற்றவியல் மசோதாக்கள் தற்கொலையை குற்றமற்றதாக்குகிறதா?
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தண்டனைச் சட்டம்-IPCக்கு மாற்றாக பாஜக முன்மொழிந்த பாரதிய நியாய சன்ஹிதா(BNS) மசோதாவில், சட்டப்பிரிவு 309 நீக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவை நீக்கப்பட்டிருந்தாலும் இருந்தாலும், அது தற்கொலை முயற்சியை முழுமையாகக் குற்றமற்றதாக்கவில்லை.
முன்மொழியப்பட்ட BNSஇன் சட்டப்பிரிவு 224, "ஒரு பொது ஊழியரை தனது உத்தியோகபூர்வ கடமையைச் செய்யவிடாமல் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தற்கொலை செய்ய முயற்சிப்பவருக்கு ஒரு வருடம் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவை தண்டனையாக வழங்கப்படும்" என்று கூறுகிறது.
அதாவது, போராட்டக்கார்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றம் என்கிறது இந்த மசோதா.
அது போக, புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 3 மசோதாக்களிலும் பல்வேறு இடங்களில் தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.