Loading...
தவெக அரசின் முதல் பட்ஜெட்: கல்வி முதல் மின்சாரம் வரை, எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தெரியுமா?
TVK அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: கல்வி முதல் மின்சாரம் வரை, எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டை (2026-27) நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்கள் துறை வாரியாகக் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

கல்வி

கல்வி & சமூக வளர்ச்சித் துறைகள்

கல்வித் துறை (மொத்தம்): ரூ.52,920 கோடி

அதில், பள்ளிக் கல்வித்துறை: ரூ.44,527 கோடி, உயர்கல்வித் துறை: ரூ.8,393 கோடி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை: ரூ.9,818 கோடி

சமூக நீதித் துறை: ரூ.3,937 கோடி

பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை: ரூ.1,700 கோடி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை: ரூ.1,485 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை: ரூ.1,051 கோடி

ஊரக வளர்ச்சி

உள்கட்டமைப்பு, நகர்ப்புறம் & ஊரக வளர்ச்சி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை: ரூ.39,609 கோடி

நகர்ப்புற வளர்ச்சித் துறை (மொத்தம்): ரூ.38,715 கோடி

அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்: ரூ.29,863 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி: ரூ.8,852 கோடி

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை: ரூ.21,524 கோடி

எரிசக்தித்துறை (மின்சாரம்): ரூ.15,828 கோடி

போக்குவரத்துத் துறை: ரூ.13,561 கோடி

நீர்வளத் துறை: ரூ.9,264 கோடி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ரூ.23,357 கோடி

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை: ரூ.14,984 கோடி

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை: ரூ.14,830 கோடி

கூட்டுறவுத் துறை: ரூ.8,028 கோடி

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை: ரூ.4,880 கோடி

ADVERTISEMENT

உள்துறை

உள்துறை, நிர்வாகம் & நிதி

அரசு ஊழியர் நலன் (ஓய்வூதியம்): ரூ.47,240 கோடி

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை: ரூ.17,290 கோடி

காவல்துறை: ரூ.14,552 கோடி

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை: ரூ.17,150 கோடி

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை: ரூ.11,532 கோடி

நீதி நிர்வாகம்: ரூ.2,486 கோடி

வணிக வரிகள் துறை: ரூ.651 கோடி

பத்திரப் பதிவுத் துறை: ரூ.475 கோடி

இயற்கை வளங்கள் துறை: ரூ.438 கோடி

தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை:ரூ.4,414 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(MSME):ரூ.2,142 கோடி

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை: ரூ.2,022 கோடி

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை:ரூ.1,678 கோடி

AI, IT மற்றும் டிஜிட்டல் சேவைகள்:ரூ.398 கோடி

ADVERTISEMENT

இதர துறைகள்

இதர முக்கியத் துறைகள்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை: ரூ.1,762 கோடி

சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை: ரூ.775 கோடி

இந்து சமய அறநிலையத் துறை: ரூ.708 கோடி

தமிழ் வளர்ச்சித் துறை: ரூ.3.5 கோடி

ADVERTISEMENT