Loading...
மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய்யின் முதல் பயணம்; பூந்தமல்லி - போரூர் வழித்தடம் அக்டோபர் 11-ல் திறப்பு
பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார் பிரதமர் மோடி

மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய்யின் முதல் பயணம்; பூந்தமல்லி - போரூர் வழித்தடம் அக்டோபர் 11-ல் திறப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரயில் சேவையை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்று இணைந்து கலந்துகொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வு இதுவாகும்.

விவரங்கள்

ஐஐடி மற்றும் வேலூர் பயணத் திட்டங்கள்

போரூரில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை ஐஐடி வளாகத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை' திறந்து வைக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாலையில் ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு புறப்பட்டுச் செல்லும் பிரதமர், அங்கு புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள வேலூர் விமான நிலையம் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

பிரதமரின் சென்னை மற்றும் வேலூர் வருகையை முன்னிட்டு மாநிலக் காவல் துறை சார்பில் விரிவான ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT