
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்?
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இதன் மூலம், தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதும், 26/11 மும்பை தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு ரிமோட் கண்ட்ரோல் அறை பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவரங்களை விசாரணையில் நேரடியாக ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் குறைந்தது 26 இந்திய சுற்றுலாப் பயணிகள், அனைவரும் ஆண்கள், பெரும்பாலும் இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர்.
முதற்கட்ட தடயவியல் பகுப்பாய்வு மற்றும் உயிர் பிழைத்தவர்களின் அறிக்கைகள்படி, தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும் ஏகே துப்பாக்கிகள் மற்றும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட தானியங்கி ஆயுதங்களுடன் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
கூற்று
ISI கட்டுப்பாடு மையங்கள் மூலம் கண்கணிக்கப்படும் பாதுகாப்பு ரகசிய இடங்கள்
"எங்கள் உளவுத்துறை இடைமறிப்புகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பைக் குறிக்கின்றன. முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள சில பாதுகாப்பு மையங்களில் டிஜிட்டல் தடயத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம், இவை இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பெரிய தாக்குதல்களுக்கான முக்கிய மையங்களாக இருந்தன, அவை பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன," என்று விசாரணை அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.
உள்ளீடுகளை மேற்கோள் காட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில், பாகிஸ்தான் இராணுவமும், ஐஎஸ்ஐயும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்வதை தீவிரமாக ஊக்குவிப்பதாக உளவு செய்தி உள்ளது என அந்த உளவு அதிகாரி கூறினார்.
உதவி
தீவிரவாதிகள் எல்லையை தாண்ட உதவும் உள்ளூர் நபர்கள்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில், ஊடுருவிய பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய நபர்களை தேடும் வகையில் விரிவான தேடல்களை மேற்கொண்டது.
இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு, இந்த பயங்கரவாதிகள் உள்ளூர் நபர்களால் வழிநடத்தப்பட்டு, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பணத்தையும் வெவ்வேறு இடங்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் NIA ஒரு அறிக்கையில்,"பயங்கரவாதிகள் கதுவா, உதம்பூர், தோடா, கிஷ்த்வார், ரியாசி, ராஜோரி, பூஞ்ச் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய உள் மாவட்டங்களுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது" என்று கூறியது.
காஷ்மீரில் உளவுத்துறையை கையாளும் ஒரு மூத்த அதிகாரி, "தற்போது, பள்ளத்தாக்கில் 55 முதல் 60 வரை உயர் பயிற்சி பெற்ற வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
செயலி
மலையேற்றத்திற்கு உதவும் செயலியை பயன்படுத்தும் ISI
புலனாய்வு அதிகாரியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, அதன் ஆஃப்லைன் பதிப்பில் ஆல்பைன் குவெஸ்ட் செயலியை பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது; இது ஒரு வழிசெலுத்தல் செயலியாகும்.
இது பெரும்பாலும் தொழில்முறை மலையேற்றக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது.
"இந்திய பாதுகாப்புப் படை முகாம்கள், போலீஸ் கான்வாய் இயக்கம் மற்றும் தடுப்புகள் பற்றிய விவரங்களை ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ இந்த செயலியுடன் வழங்கியதாக தகவல் உள்ளது," என்று அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சர்வர்களைக் கொண்ட மறைகுறியாக்கப்பட்ட ரேடியோ தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிப் பகுதிகளில் தங்கியுள்ளனர், குறைந்த உயரங்களைத் தவிர்த்து வருகின்றனர்.