கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்
வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபும், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் சென்னை- கடலூர் இடையே கரையை கடக்கும் என கணிப்பு
இந்நிலையில், பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது புயல் நவம்பர் 30ஆம் தேதி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும். நவம்பர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 27-ம் தேதி: சென்னையில் லேசானது முதல் மிதமான மழை - வடக்கு நகர்வு 28-ம் தேதி:சென்னைக்கு மிதமான மழை - வடக்கு நகர்வு 29-ம் தேதி:புயல் மேற்கு திசையில் நகரத் தொடங்கியதும், சென்னையில் கனமழை 30-ம் தேதி:சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை - மேற்கு நகர்வு டிசம்பர் 1:சென்னையில் மிதமான மழை - இழுபறி விளைவு டிசம்பர் 2:சென்னையில் மிதமான மழை - இழுபறி விளைவு