ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை மக்களவையில் இரண்டு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா என அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்பட்ட ONOP மசோதா ஆகியவை இதில் அடங்கும்.
Twitter Post
மசோதா தாக்கல் செய்த பின்னர் என்ன நடைமுறை
பாராளுமன்றத்தில் பாஜகவின் நீண்டகால தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மேக்வால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பரந்த ஆலோசனைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு அனுப்புமாறு கோருவார். பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களின் விகிதாசார பலத்தை பிரதிபலிக்கும் வகையில், விகிதாச்சார அடிப்படையில் கூட்டுக் குழு அமைக்கப்படும். அக்கட்சியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பா.ஜ., மிகப்பெரிய கட்சியாக இருப்பதால், குழுவின் தலைவர் பதவியையும், பல உறுப்பினர் பதவிகளையும் பெறும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை மாலைக்குள் குழுவின் அமைப்பை அறிவிப்பார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டம்
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை எதிர்த்தனர். இந்த மசோதா "ஜனநாயக விரோதமானது" என்றும் "இந்தியாவின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க வடிவமைக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கை" என்றும் கூறியுள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டியின் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இரண்டு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களும், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் (ஊராட்சி மற்றும் நகராட்சிகள்) 100 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும்.