Loading...
அக்டோபர் 2026 தென்னிந்திய திரைப்பட ரிலீஸ்: ஜெயிலர் 2 முதல் ரணபலி வரை முழு லிஸ்ட்
முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக உள்ளன

அக்டோபர் 2026 தென்னிந்திய திரைப்பட ரிலீஸ்: ஜெயிலர் 2 முதல் ரணபலி வரை முழு லிஸ்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
06:20 pm

செய்தி முன்னோட்டம்

2026 அக்டோபர் மாதம் தென்னிந்தியத் திரையுலகிற்கு மிக முக்கிய மாதமாக அமையவுள்ளது. காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு, முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக உள்ளன. அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள முக்கியத் திரைப்படங்களின் பட்டியல் இதோ:

# 1

ஏழு கடல் ஏழு மலை

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள காதல் சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப் படம், 2024 ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்ற நிலையில், அக்டோபர் 1 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

# 2

பத்தா

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் லிஜோமோல் ஜோஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள குற்றவியல் கதைக்களம் கொண்ட படம் 'பத்தா'.

1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப் படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, முராத் கெதானி, ப்ரியா அட்லி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ADVERTISEMENT

# 3

டோன்ட் டிரபுள் தி டிரபுள்

ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் ஃபகத் பாசில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ஃபேன்டஸி டிராமா படம் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்'.

எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப் படம் ஃபகத் பாசில் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.

எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 2 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT

# 4

சிக்மா

சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படம் 'சிக்மா'.

புதையல் வேட்டை மற்றும் Heist பாணி கதையைக் கொண்ட இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

# 5

ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ்

வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இக்குடும்ப கதைக்களத்தை கொண்ட திரைப்படம் அக்டோபர் 2-லிருந்து தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அக்டோபர் 9 அன்று திரைக்கு வருகிறது.

ஸ்ரீநிதி ஷெட்டி, நர ரோஹித், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

# 6

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியனாக களம் இறங்கும் 'ஜெயிலர் 2'.

வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருடன் மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகிறது.

# 7

ரணபலி

ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள வரலாற்று ஆக்ஷன் படம் 'ரணபலி'.

19-ஆம் நூற்றாண்டு தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் போராளியின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ADVERTISEMENT