
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.
பட தயாரிப்பு நிறுவனமான லைகா #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், #தலைவர்170 இல் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
காரணம் 32 வருடங்களுக்கு பின், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைவது தான்.
இவர்கள் இருவரும், கடந்த 1991ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஹம்(Hum) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக தமிழில் முதன்முறையாக நடிக்கும் அமிதாப்பச்சன், ஏற்கனவே சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ:
2nd card
முதன் முதலில் கன்னடத்தில் என்ட்ரி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தென்னிந்திய திரை உலகிற்குள் முதன் முதலில் கன்னட சினிமா வழியாக நுழைந்தார்.
கடந்த 2005, கன்னடத்தில் வெளியான 'அமிர்த தாரே' திரைப்படம் மூலம் தென்னிந்திய திரை உலகில் கால் பதித்தார்.
அடுத்ததாக 2010 மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான, 'காந்தார்' திரைப்படம் மூலம் அமிதாப்பச்சன் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் தோன்றினார்.
2014ஆம் ஆண்டு, தெலுங்கில் வெளியான நாகார்ஜுனாவின் 'மனம்' திரைப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் தோன்றினார் அமிதாப்பச்சன்.
2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தில் நடித்த அமிதாப்பச்சன், அந்த திரைப்படத்திற்காக டப்பிங்கும் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் 'ப்ராஜெக்ட்-கே' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
3rd card
தென் திரை உலகில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன் தென் திரை உலகில் நடிப்பு மட்டுமல்லாது, சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'குலாபி' திரைப்படத்தை, ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் தயாரித்திருந்தார்.
பின் அடுத்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 'யுவதுர்கி' திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் உடன் இணைந்து, அமிதாப்பச்சன் தயாரித்திருந்தார்.
1997 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம், அஜித் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'உல்லாசம்' திரைப்படத்தை தயாரித்தவரும் அமிதாபச்சன் தான்.
இது தவிர 'பட்டர்ஃபிளை' என்ற கன்னட படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் அமிதாப் பச்சன்.
இந்நிலையில் அமிதாபச்சன் மீண்டும் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில், அதுவும் தமிழ் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.