Loading...
கிரீஸில் நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம், பெரியார் கொள்கைப்படி சுயமரியாதை திருமணமா?
கிரீஸில் நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

கிரீஸில் நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணம், பெரியார் கொள்கைப்படி சுயமரியாதை திருமணமா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
05:38 pm

செய்தி முன்னோட்டம்

கிரீஸில் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத்தின் வாரிசு காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம், தமிழ்நாட்டின் நூற்றாண்டு காலச் சமூக புரட்சியான சுயமரியாதை திருமணம் குறித்த விவாதத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட மிக முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இத்திருமணத்தில், அனிருத் காவ்யா மாறனுக்கு தங்கச் சங்கிலி அணிவித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. முரசொலி மாறனின் பேத்தியான காவ்யா மாறனின் திருமணம் எந்த முறைப்படி நடந்தது என நெட்டிசன்கள் விவாதித்த நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா X தளத்தில் விளக்கமளித்து சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 7-A சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கிறது.

இதன்படி, இரு இந்துக்களுக்கு இடையே உறவினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் சடங்குகள் இன்றி நடைபெறும் திருமணம் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையில் நிறைவு செய்யப்படலாம்.

1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதி, தங்களுக்குப் புரிந்த மொழியில் ஒருவர் மற்றொருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்கிறேன் என அறிவிப்பது.

2. இருவரும் பரஸ்பரம் மாலை அணிவித்துக் கொள்வது அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது.

3. புரோகிதர் மற்றும் வேத மந்திரங்கள் இன்றி தாலி கட்டிக்கொள்வது.

ADVERTISEMENT

வரையறை

யாருக்குப் பொருந்தும்?

இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டுமே நடைமுறையில் உள்ள இச்சட்டத்தின்படி, மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருந்தால் பிரிவு 7-A கீழ் திருமணம் செய்யலாம்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

வழக்கறிஞர்கள் உள்ளிட்ட மூன்றாம் நபர் முன்னிலையிலும் ரகசியமற்ற முறையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம் என 2023 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT