சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை
செய்தி முன்னோட்டம்
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 7,000 குழந்தைகள் வரை சிகிச்சை பெற வருவதாக, அரசுக்கு சொந்தமான சீன தேசிய வானொலி கூறுகிறது.
இந்த தொற்று பரவல், சீன மருத்துவ கட்டமைப்பை திக்குமுக்காடச் செய்திருக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முக கவசம் அணியவும் சீன மக்களை, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
2nd card
புதிய வகை நிமோனியாவின் அறிகுறிகள் என்ன?
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இந்த புதிய வகை நிமோனியா பாதிக்கப்பட்ட குழந்தைகள், காய்ச்சல் மற்றும் நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மற்ற, சுவாசநோய் அறிகுறிகளான சளி, இருமல் உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு ஏற்படவில்லை.
'கண்டறியப்படாத நிமோனியா' பரவலுக்கு, சமீபத்தில் விளக்கிக் கொள்ளப்பட்ட கோவிட் கட்டுப்பாடுகள் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
கோவிட் கட்டுப்பாடுகள் உடன் இருந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும், நோய் எதிர்ப்பு தன்மையின்மையின் காரணமாகவே, தற்போது இந்த வகை நிமோனியா பரவிவருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இதை, இம்யூனிட்டி டெப்ட்(Immunity Debt) என அவர்கள் அழைக்கிறார்கள்.
சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் காணப்படும் இந்த நோய், RSV, பாக்டீரியா அல்லது மைக்கோபிளாஸ்மா போன்ற ஏற்கனவே இருக்கும் கிருமிகளால் ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
3rd card
உலக சுகாதார நிறுவனத்தின் கேள்விக்கு சீனா பதில்
நிமோனியா என்பது நுரையீரல் அழற்சியை மற்றும் தொற்றைக் குறிக்கும், வழக்கமான மருத்துவ சொல்லாகும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படலாம்.
சீனாவில் அதிகரித்து வரும் தொற்று குறித்து கடந்த புதன்கிழமை உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில்,
தற்போது சீனா அரசாங்கம் நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம், சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (NHC) அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
அதில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் பராமரிப்பதில், அவர்கள் மிகுந்த கவனம் செலுத்துவதாகக் கூறியது.
4th card
புதுமையான நோய்க்கிருமிகளை சீனா கண்டறியவில்லை
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "அசாதாரண அல்லது புதுமையான நோய்க்கிருமிகளை" சீனா கண்டறியவில்லை என விளக்கம் அளித்திருந்தது.
மேலும், சீனாவின் வடக்கு பகுதியில் பரவி வரும் நிமோனியாவுக்கு "பல அறியப்பட்ட நோய்க்கிருமிகள் "காரணம் என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
கடந்த அக்டோபரில் இருந்து வடக்கு சீனா பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளை விட அதிகப்படியான நிமோனியா காய்ச்சல் பாதிப்புகள் பதிவு செய்திருந்தாலும்,
கோவிட் நடைமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதால், இதை எதிர்பாராத அதிகரிப்பாக பார்க்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
வழக்கமாக குளிர் காலத்தில் நிமோனியா பாதிப்புகள் ஏற்படுவதும், உலக அளவில் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
embed
சீனாவில் புதுவகை கிருமியால் நிமோனியா பரவவில்லை
Since mid-October 2023, WHO has been monitoring data from Chinese surveillance systems that have been showing an increase in respiratory illness in children in northern China. Today, WHO held a teleconference with Chinese health authorities in which they provided requested data... pic.twitter.com/lkO22QrelQ— World Health Organization (WHO) (@WHO) November 23, 2023