Loading...
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பகிரங்க ஆதரவு
UN கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பகிரங்க ஆதரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
10:05 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில்(UNSC) இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்குவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், மேற்கத்திய நாடுகளுக்குக் கூடுதல் நிரந்தர இடங்கள் ஒதுக்குவதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. நியூயார்க்கில் நடைபெறும் UNGA கூட்டத்தில்உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,"ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் என்பது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட க்ளோபல் சவுத் பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்குவதாக மட்டுமே இருக்க வேண்டும். ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற இராணுவ மயமாக்கலை நோக்கிச் செல்லும் மேற்கத்திய நாடுகளுக்கு கூடுதல் நிரந்தர இடங்களை வழங்க முடியாது. பிரேசில் மற்றும் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கிறது" எனக்கூறினார்.

ஆதரவு

இந்தியாவிற்கு குவியும் உலக நாடுகளின் ஆதரவு

ரஷ்யாவைத் தவிர, மேலும் பல சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்குத் தங்களது ஆதரவுக் குரலை எழுப்பியுள்ளன.

உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என மொரிஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்சய் ராம்பூல் மற்றும் போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டெனெக்ரோ வலியுறுத்தினர்.

1.6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டத்திற்குப் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர இடம் கூட இல்லாதது 1945-ஆம் ஆண்டின் பழைய உலக அமைப்பைப் பிரதிபலிப்பதாகச் சியரா லியோன் அதிபர் ஜூலியஸ் மாடா பயோ மற்றும் கானா அதிபர் ஜான் டிராமானி மகாமா சுட்டிக்காட்டினர்.

சீர்திருத்த நடைமுறை

ஐ.நா சாசன சீர்திருத்த நடைமுறை

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி மற்றும் மார்ஷல் தீவுகளின் அதிபர் ஹில்டா ஹெய்ன் ஆகியோரும் ஜி4 (G4 - இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி) கூட்டமைப்பின் கீழ் பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

ஐ.நா சாசனத்தில் திருத்தம் கொண்டுவர பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலும் அவசியமாகும்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT