Loading...
ஹஃபிஸ் சயீத் காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பினார்: பாகிஸ்தான் மதபோதகர் நசீருதீன் மத்னி சர்ச்சை பேச்சு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஹஃபிஸ் சயீதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பாகிஸ்தான் மதபோதகர்

ஹஃபிஸ் சயீத் காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பினார்: பாகிஸ்தான் மதபோதகர் நசீருதீன் மத்னி சர்ச்சை பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
04:22 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானை சேர்ந்த தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹஃபிஸ் சயீத், காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பியதாக பாகிஸ்தான் மதபோதகர் நசீருதீன் மத்னி வெளிப்படையாகப் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று பகவல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஹஃபிஸ் சயீதைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

சர்ச்சை உரை

மத்னியின் சர்ச்சை உரை மற்றும் நியாயப்படுத்தல்

ஹஃபிஸ் சயீத் காஷ்மீருக்காக தனது பங்களிப்பையும் தியாகத்தையும் வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்ட மத்னி, அவர் எந்தவொரு சாதாரணக் குற்றத்தையும் செய்யவில்லை என நியாயப்படுத்த முயன்றார்.

"அவர் யாருடைய கடை ஷட்டரையோ அல்லது மரங்களையோ சேதப்படுத்தவில்லை; மாறாக காஷ்மீருக்காக 10,000 இளைஞர்களை தியாகம் செய்ய முன்வந்தார். அதனால் தான் அவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று மத்னி பேசியுள்ளார்.

பஹல்காம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலும் வழக்கின் தீவிரமும்

கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் ஹஃபிஸ் சயீத் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை(NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) ஆகியவற்றின் முக்கிய பொறுப்பாளராக செயல்பட்ட சயீதுக்கு எதிராக ஜம்மு சிறப்பு நீதிமன்றம் பிணையில் வர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உட்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் ஹஃபிஸ் சயீதை மீண்டும் இந்தியக் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பாகிஸ்தான் மதபோதகரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT