NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்
    சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் உலக கோப்பையில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி ஷமி தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

    SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்

    எழுதியவர் Srinath r
    Dec 16, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.

    ஏற்கனவே, டி20 தொடர், 1-1 என சமனில் முடிந்து நிலையில், ஒருநாள் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

    இந்நிலையில், தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டு போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து, காயம் காரணமாக முகமது ஷமி விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஷமி, டெஸ்ட் தொடரில் பங்கேற்பது உடற்தகுதியை பொருத்தது என்ற நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

    அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்திய அணியில் முதன்மையான பந்துவீச்சாளராக ஷமி திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    குடும்ப மருத்துவ அவசர நிலையால் தீபக் சாஹர் விலகல்

    ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மேற்குவங்கத்தைச் சார்ந்த ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவதற்காக, இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கிய நிலையில், ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே எல் ராகுல் வழி நடத்துகிறார்.

    3rd card

    டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

    ரோஹித் சர்மா (C), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (wk), KL ராகுல் (wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (VC), பிரசித் கிருஷ்ணா.

    ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி:

    ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (C)(wk), சஞ்சு சாம்சன் (wk), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    பிசிசிஐ
    ஒரு நாள் போட்டி

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்திய கிரிக்கெட் அணி

    பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு ராகுல் டிராவிட்
    நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார் கிரிக்கெட்
    2024இல் 6 போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கை செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்
    ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என கோலி முடிவெடுத்துள்ளதாக தகவல் விராட் கோலி

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    SLvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup : ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்; 3வது முறையாக 400+ ஸ்கோர்; தென்னாப்பிரிக்கா சாதனை ஒருநாள் உலகக்கோப்பை
    SAvsSL : 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை

    பிசிசிஐ

    எம்எஸ் தோனியை அணியில் சேர்க்க மறுத்த சவுரவ் கங்குலி; பின்னணியை பகிர்ந்த முன்னாள் தேர்வாளர் எம்எஸ் தோனி
    இந்திய அணியின் ஊடக உரிமை ஏலம்; ரூ.8,200 கோடி வருவாயை எதிர்பார்க்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    "ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி கிரிக்கெட்
    2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI கிரிக்கெட்

    ஒரு நாள் போட்டி

    ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி! சாதனை நாயகன் ஷுப்மன் கில்! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025