NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்
    ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2025
    07:50 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    முதுகு காயத்தால் ஓய்வு பெற்ற பும்ரா இணைவது குறித்து, இறுதி அணிகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியான பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று முடிவு செய்யப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் BCCI அறிவித்துள்ளது.

    காயம்

    பும்ராவின் முதுகு காயத்தால் ஐந்து வாரங்கள் ஓய்வு தேவைப்பட்டது

    ஜனவரி மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவால் பந்து வீச முடியவில்லை.

    இறுதியில் அவர் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக முடித்தார்.

    அவருக்கு முதுகில் ஒரு அழுத்தம் ஏற்பட்டிருந்தது, அதற்கு ஐந்து வாரங்கள் வரை ஓய்வு தேவைப்பட்டது என கூறப்பட்டது.

    பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பும்ரா உடற்தகுதி மதிப்பீட்டை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாதனை

    பும்ராவின் சாதனை ஓட்டம்

    பும்ரா சமீபத்தில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2023-25 ​​ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறத் தவறிய போதிலும், வேகப்பந்து வீச்சாளர் ஒன்றன்பின் ஒன்றாக அற்புதமான ஆட்டங்களை வழங்கினார்.

    இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இழந்தது, ஆனால் பும்ரா அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆவார். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவும் அவர் உதவினார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    இந்தியாவின் வேகபந்து வீச்சு குறித்து கவலைகள் எழுந்துள்ளன

    2025 சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், இந்திய அணி அதன் வேகப்பந்து வீச்சாளர்களிடையே உடற்தகுதி பிரச்சினைகளைக் கையாள்கிறது.

    பும்ராவின் வருகை குறித்த நிச்சயமற்ற தன்மையும், முகமது ஷமியின் அனல் பறக்கும் ஆட்டமும் புருவங்களை உயர்த்தின.

    திரும்பியதிலிருந்து ஷமியின் ஃபார்ம் சீரற்றதாக உள்ளது, இது அவரது தயார்நிலை குறித்த கவலைகளை எழுப்புகிறது.

    அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் மற்ற விருப்பங்களாக இருந்தாலும், முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    வருண்

    ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் CT அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை பிசிசிஐ நியமித்தது.

    குறிப்பாக, தற்காலிக அணியில் முதலில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோருடன் பயணம் செய்யாத மாற்று வீரராக இருப்பார்.

    கடந்த வாரம், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி அணியில் வருண் சேர்க்கப்படுவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.

    "அவரிடம் ஏதோ வித்தியாசம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறினார்.

    தகவல்

    சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல்

    சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், மற்றும் ரவீந்திர ஜடேஜா.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 NEWS 🚨

    Fast bowler Jasprit Bumrah has been ruled out of the 2025 ICC Champions Trophy due to a lower back injury. Harshit Rana named replacement.

    Other squad updates 🔽 #TeamIndia | #ChampionsTrophy https://t.co/RML5I79gKL

    — BCCI (@BCCI) February 11, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜஸ்ப்ரீத் பும்ரா
    சாம்பியன்ஸ் டிராபி
    ஐசிசி
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    ஜஸ்ப்ரீத் பும்ரா

    ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய கிரிக்கெட் அணி
    World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் ஐசிசி

    சாம்பியன்ஸ் டிராபி

    ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் ஒருநாள் கிரிக்கெட்
    Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட் செய்திகள்
    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஐசிசி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் தரவரிசை
    2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம் ஜெய் ஷா
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன? சாம்பியன்ஸ் டிராபி

    இந்திய கிரிக்கெட் அணி

    ஐசிசி 2024க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு; இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை ஐசிசி
    2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று இந்தியர்களுக்கு இடம்; விராட் கோலிக்கு இடமில்லை டெஸ்ட் கிரிக்கெட்
    ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து இந்தியா vs இங்கிலாந்து
    ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம் மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025