டி20 உலகக்கோப்பை: நியூயார்க்கில் இந்திய அணிக்காக ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கியுள்ளது பிசிசிஐ
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு தரப்பட்டுள்ள மோசமான பயிற்சி வசதிகள் மற்றும் நியூயார்க் ஆடுகளம் பற்றிய கடுமையான புகார்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஹோட்டல் ஜிம்மில் அதிருப்தி எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால்,புதிய ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்குமாறு அணி சார்பாக பிசிசிஐக்கு அழுத்தம் தரப்பட்டது. லாங் ஐலேண்டில் தங்கியுள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, தங்கள் குழுவிற்கு ஹோட்டலில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, நியூயார்க் நகரில் உள்ள வீரர்களுக்கு ஜிம் உறுப்பினர் அட்டை பெருவர்தற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தனியார் ஜிம் மெம்பர்ஷிப்பை வாங்கிய பிசிசிஐ
வீரர்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பிறகு, பிசிசிஐ நியூயார்க்கில் உள்ள பிரபலமான ஜிம்மில் விரைவாக குழுவிற்கு உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளது. டீம் இந்தியாவுக்கு நியூயார்க்கில் ஒரு ஹோட்டல் வழங்கப்பட்டாலும், அவர்கள் நீண்ட பயணத்தைத் தவிர்க்க லாங் ஐலேண்டில் தங்கத் தேர்வு செய்தனர். நியூஸ்18 அறிக்கையின்படி, ஹோட்டல் வசதிகளில் வீரர்கள் மகிழ்ச்சியடையவில்லை. லாங் ஐலேண்ட் நியூயார்க் நகரத்திலிருந்து சுமார் 80கிமீ தொலைவில் உள்ளது. ஐசிசி கான்டியாக் பூங்காவை பயிற்சிக்காக ஏற்பாடு செய்தது. இருப்பினும், இது தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி இடமாக இல்லாமல் குடும்ப பூங்காவாக மாறியது. அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரோஹித் ஷர்மா, பயிற்சி வசதிகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் இது குறித்து அணி நிர்வாகமோ, பிசிசிஐயோ, ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை.