Loading...
28 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை
ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை

28 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
12:42 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மீராபாய் சானு மொத்தம் 198 கிலோ எடையைத் தூக்கி (ஸ்னாட்ச் - 87 கிகி, கிளீன் & ஜெர்க் - 111 கிகி) இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கான 28 ஆண்டு கால பதக்க வறட்சியை அவர் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். இதற்கு முன் 1998 பாங்காக் ஆசிய விளையாட்டில் கர்னம் மல்லேஸ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

தங்கம்

வடகொரியா தங்கம் - உலக சாதனை

இப்பிரிவில் வடகொரியாவின் ரி சோங் கும் மொத்தம் 215 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

கிளீன் & ஜெர்க் பிரிவில் 121 கிலோ எடையைத் தூக்கி புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இந்தோனேசியாவின் லூலுக் டயானா திரி விஜயானா 191 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள 31 வயதான மீராபாய் சானுவுக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும்.

2014-இல் 9-வது இடம், 2018-இல் காயத்தால் விலகல் மற்றும் 2023 ஹாங்க்சோ தொடரில் 4-வது இடம் எனத் தொடர்ந்து ஏமாற்றங்களை சந்தித்த சானு, தற்போது தனது ஆசிய விளையாட்டு பதக்க கனவை நனவாக்கியுள்ளார்.

ADVERTISEMENT