LOADING...
YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

எழுதியவர் Srinath r
Dec 21, 2023
10:27 am

செய்தி முன்னோட்டம்

போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். பாதுகாப்பு படைகளில் பாலின சமத்துவத்தை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டது. இந்த ஆண்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு விடுப்புக்கான விதிகளை ராணுவத்தில் உள்ள பெண் ராணுவ வீரர்களைப் போல, மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு இணையாக நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார் அது மட்டுமின்றி ஆயிரம் பெண் அக்னி வீரர்கள், இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவத்தில் வரலாறு படைத்த 10 பெண்கள் பற்றிய தொகுப்பு.

2nd card

இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கும் முதல் பெண்

கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரியாக, இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு தலைமை தாங்கினார். இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை டிசம்பர் மாதம் ட்விட்டரில் இதை வெளியிடப்பட்டது. அவர் தற்போது ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் முதல் லெப்டினன்டாக உள்ளார். குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, முன்னணி போர்ப் பிரிவுக்கு பொறுப்பேற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி ஆனார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விமானப்படையின் பறக்கும் பிரிவின், முதல் பெண் விமானத் தளபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3rd card

கேலண்ட்ரி விருது வென்ற வென்ற முதல் பெண்

விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி, இந்திய விமானப்படையில் கேலண்ட்ரி விருது வென்ற முதல் பெண் ஆனார். 2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 47 உயிர்களை காப்பாற்றியதற்காக, இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கேப்டன் சிவ சவுகான் சியாச்சின் போர் பள்ளியில் தேர்ச்சி பெற்ற பின்னர், உலகிலேயே மிக உயரமான சியாச்சின் போர் முனையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி ஆனார். ஜனவரி மாதம் முதல் இங்கு பதவியில் இருக்கும் அவர், அவரின் குழுவுடன் இணைந்து, பல தீவிரவாத செயல்களை தடுத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

4th card

பீரங்கி படையில் "ஐந்து பெண் அதிகாரிகள்"

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், பீரங்கி படையில் "ஐந்து பெண் அதிகாரிகள்" இந்திய ராணுவத்தால் ஏப்ரல் மாதம் இணைத்துக்கொள்ளப்பட்டனர். லெப்டினன்ட் மெஹக் சைனி, லெப்டினன்ட் சாக்ஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் பயஸ் முட்கில் மற்றும் லெப்டினன்ட் அகன்ஷா ஆகியோர் அந்த ஐந்து அதிகாரிகள் ஆவர். இந்த ஆண்டு நவம்பர் மாதம், மருத்துவர் சுனிதா ராணுவ மருத்துவமனைகளில் உள்ள ரத்த மாற்று மையத்திற்கு தலைமை ஏற்ற முதல் பெண் அதிகாரியானார். டெல்லியில் உள்ள மிகப்பெரிய ராணுவ ரத்தமாற்று மையத்திற்கு இவர் தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

5th card

எல்லைச் சாலைகள் சார்பில் வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் 

117 பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரியான கேப்டன் சுர்பி ஜக்மோலா, பூட்டானில் உள்ள எல்லைச் சாலைகள் அமைப்பின் திட்டமான டண்டக்கில் நியமிக்கப்பட்டார். எல்லைச் சாலைகள் அமைப்பில் (BRO), வெளிநாட்டுப் பணியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி இவர் ஆவார். மிசோரம் ஆளுநரின் உதவியாளர்-டி-கேம்பாக (ADC) ஸ்க்வாட்ரான் லீடர் மனிஷா பதி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் கவர்னரின் உதவியாளர்-டி-கேம்பாக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6th card

சுயாதீன களப் பட்டறையின் தலைமை பொறுப்பேற்ற முதல் பெண்

இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை மையத்தின் சப்ளை செயின் பராமரிப்புக்கு, தகவல் தொடர்பு மண்டல மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பட்டாலியன் பொறுப்புக்கு முதல் பெண் அதிகாரியாக கர்னல் சுசிதா சேகர் நியமிக்கப்பட்டார். கார்ப்ஸ் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியர்களின் கர்னல் கீதா ராணா, கிழக்கு லடாக்கில் உள்ள ஒரு சுயாதீன களப் பட்டறையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் அதிகாரி ஆனார்.

Advertisement