Loading...
உத்தரகாண்ட் பேருந்து விபத்து: தெஹ்ரி கர்வால் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
கர்வால் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் பேருந்து விபத்து: தெஹ்ரி கர்வால் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
12:04 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள குலார் பஜார் அருகே பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரித்துவாரில் இருந்து கர்ணபிரயாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த 'விஸ்வநாத் சேவா' நிறுவனத்திற்கு சொந்தமான அந்தப் பேருந்தில், விபத்து நடந்தபோது சுமார் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து பாய்ந்ததால் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள்

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் - 26 பேர் மருத்துவமனையில் அனுமதி

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட காயமடைந்த பயணிகள் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 26 காயமடைந்த பயணிகளின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பியாசி மற்றும் தல்வாலா முகாம்களில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பயணிகள் உத்தரகாண்ட் மட்டுமின்றி ஜார்க்கண்ட், பீகார், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT