தவெக அரசின் 100 நாள்: முதல்வர் விஜய் வெளியிட்ட சாதனைகள் பட்டியலும், எதிர்க்கட்சிகளின் சாடலும்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசின் 100 நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்த வீடியோ பதிவை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். "100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" என அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த 100 நாள் ஆட்சியில் தவெக அரசு செய்த சாதனைகளை முதல்வர் ஒருபுறம் பட்டியலிட்டால், மறுபுறம் அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் தப்பவில்லை. பல சாடல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதைப்பற்றி ஒரு பார்வை:
முக்கிய திட்டங்கள்
100 நாள் ஆட்சியில் தவெக அரசு நிறைவேற்றிய முக்கிய திட்டங்கள்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.560 கோடி ஒதுக்கீட்டில் திட்டம் அறிவிப்பு.
அண்ணனின் சீர்: திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: கிராமப்புற மகளிரின் பொருளாதாரத்தை உயர்த்த அறிமுகம்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனிப்படை அமைப்பு.
பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி.
விவசாய ஊக்குவிப்புத் தொகை: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000; நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 ஆக உயர்வு.
மேம்பாடு
கல்வி & இளைஞர் மேம்பாடு; பொருளாதாரம், கட்டமைப்பு & நிர்வாகம்
12 லட்சம் மாணவர்களுக்கும், 1 லட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள்.
ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய பிராண்டட் சைக்கிள்கள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு.
ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு.
சுகாதாரம், குடிநீர், சாலை மேம்பாட்டிற்கு ஆண்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.
ஏழை எளிய மக்களின் வீட்டு வசதிக்காக ரூ.3,500 கோடி ஒதுக்கீடு.
717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள்.
CMDA அளவிலேயே திட்ட அனுமதி மற்றும் நேரடித் தொடர்பற்ற பத்திரப்பதிவு முறை அமல்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 17, 2026
A Government for Generations#CMJosephVijay pic.twitter.com/zZH6bs4yAy
விமர்சனங்கள்
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன
தவெக அரசின் 100 நாள் சாதனைப் பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், தவெக அரசின் 100 நாள் சாதனை என்பது ஊடக விளம்பரத்திற்கான வெறும் மேலோட்டமான விஷயம் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் சாடியுள்ளனர்.
சட்டசபையில் திமுக மற்றும் அதிமுகவின் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் புதிய அமைச்சர்களின் அனுபவமின்மை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மின்சார விநியோகச் சீரமைப்பு ஆகியவை தவெக அரசுக்கு முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
திமுக ஆட்சியின் முதல் 100 நாட்களில், கொரோனா காலத்திலும் மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தியது.
— DMK IT WING (@DMKITwing) August 15, 2026
தவெக ஆட்சியின் 100 நாளில், பழைய திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி, புதிய திட்டங்கள் எதுவும் இன்றி தமிழ்நாடு நாசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.… pic.twitter.com/jNO4GKJOU4