NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-

    மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    04.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர், விழுப்புரம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 5ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    05.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர். பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 6ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    06.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 7-8ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    07.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலுல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    08.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி,திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு

    அக்டோபர் 9-10ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    09.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்கள்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    தமிழக கடலோரப்பகுதிகள்

    04.10.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வங்கக்கடல் பகுதிகள்

    04.10.2024: வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

    pic.twitter.com/oSFqiJI2Hq

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    வானிலை அறிக்கை

    தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  டெல்லி
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்  தமிழகம்
    8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை  இந்தியா
    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளா
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025