தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திடீர் டெல்லி பயணம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டம்-ஒழுங்கு குறித்து விளக்கம்?
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று காலை 7 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். தனது இந்த டெல்லி பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் நேரில் சந்தித்துப் பேச உள்ளார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆளுநர் தரப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கேட்டிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பயணத் திட்டம்
அமித்ஷாவுடனான சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் தற்போதைய சூழல் குறித்து ஆளுநர் அர்லேகர் விரிவான விளக்கம் அளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் நவம்பர் 15-ஆம் தேதி மாலை ஆளுநர் அர்லேகர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கடந்த வாரம்தான் டெல்லிக்குச் சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
அந்தச் சந்திப்பு முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், தற்போது மீண்டும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கவிருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.