LOADING...
தமிழகத் தேர்தல் 2026: அதிர வைத்த விஜய்யின் தவெக வாக்கு வித்தியாசங்கள்- முழு புள்ளிவிவரம்
வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் திருப்பத்தூரில் வெற்றி பெற்றுள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது

தமிழகத் தேர்தல் 2026: அதிர வைத்த விஜய்யின் தவெக வாக்கு வித்தியாசங்கள்- முழு புள்ளிவிவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2026
01:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஒரு அமைச்சரின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற திமுக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதுமுக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வீழ்த்தி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அதிரடி

திருப்பத்தூர் தொகுதி: ஒரு வாக்கு தந்த அதிரடி மாற்றம்

2006 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அமைச்சர் பெரியகருப்பன், இம்முறை 83,374 வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சேதுபதி 83,375 வாக்குகளைப் பெற்று, வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அமைச்சரை, அரசியலுக்குப் புதியவர் இவ்வளவு நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது திமுகவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெற்றி

எடப்பாடி மற்றும் சோழிங்கநல்லூர்: பிரம்மாண்ட வெற்றிகள்

மறுபுறம், மாநிலத்தின் மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். எடப்பாடி தொகுதியில் அவர் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டார். அதேபோல், சோழிங்கநல்லூர் தொகுதியில் தவெக வேட்பாளர் பி. சரவணன், இரண்டு முறை திமுக எம்.எல்.ஏ-வாக இருந்த அரவிந்த் ரமேஷை 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வியக்க வைத்தார்.

Advertisement

குறைந்த வாக்கு வித்தியாசம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவான தொகுதிகள்

இத்தேர்தலில் 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 15 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தவெக 5 தொகுதிகளையும் (திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கம்பம், கும்பகோணம், போளூர்), அதிமுக 4 தொகுதிகளையும் (கன்னியாகுமரி, திருக்கோவிலூர், பரமத்தி வேலூர், பழனி) கைப்பற்றியுள்ளன. பாஜக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான உதகமண்டலமும் 976 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்திலேயே முடிவாகியுள்ளது.

Advertisement