100 வது பிறந்தநாள் காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு தலைவர்கள் வாழ்த்து
மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் (நூற்றாண்டு விழா) விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக இருக்க வேண்டும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணி மட்டுமன்றி, நிரந்தரமான கூட்டணி ஆகும்" என்று தெரிவித்தார். "பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை; நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
Twitter Post
Twitter Post
மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவிற்கு தலைவர்கள் வாழ்த்து
தோழர் நல்லகண்ணுவிற்கு திமுகவின் தூத்துக்குடி MP கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'பொதுவுடைமை சித்தாந்தத்தின் போர்வாளாக, சமரசமற்ற மக்கள் போராளியாக, எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணுவிற்கு நூற்றாண்டு விழாவில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டார். அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலையும் எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். "இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா திரு. நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்" என பதிவிட்டார்.