
தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதவிக்காலம் முடிவடைய உள்ள தமிழக எம்.பி.க்கள் பின்வருமாறு:
என். சந்திரசேகரன் (அதிமுக)
எம். சண்முகம் (திமுக)
எம். முகமது அப்துல்லா (திமுக)
பி. வில்சன் (திமுக)
இவர்கள் ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது.
அட்டவணை
மாநிலங்களவை தேர்தல் கால அட்டவணை
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜூன் 9
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஜூன் 10
வேட்புமனுக்களுக்கு பரிசீலனை: ஜூன் 11 வேட்புமனு
திரும்பப்பெறும் இறுதி நாள்: ஜூன் 12
தேர்தல் தேதி: ஜூன் 19 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு: ஜூன் 19 மாலை 5 மணிக்கு
எத்தனை இடங்கள்?
யாருக்கு எத்தனை இடங்கள்?
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், தற்போதைய சட்டமன்ற சக்தியைக் கொண்டு திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் வாய்ப்புள்ளதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.