Loading...
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
07:29 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இதனால் காலியான இவ்விரு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விவரம்

தொகுதிவாரியாக வாக்காளர்கள் & வாக்குச்சாவடிகள் விவரம்

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வேட்பாளர்கள் உள்ளனர். 167 மையங்களில் 285 வாக்குச்சாவடிகள் உள்ளது.

அதில் மதுராந்தகத்தில் உள்ள கள்ளபிரான்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி எண் 72 வாக்குச்சாவடி முழுமையாகப் பெண்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் 2,22,406 (ஆண்கள்: 1,06,875, பெண்கள்: 1,15,523, 3-ஆம் பாலினத்தவர்: 8) உள்ளனர். இங்கே 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் உள்ளது.

களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்:

மதுராந்தகம்: மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), ஜானகிராமன் (நாம் தமிழர்), சுகந்தி (கம்யூனிஸ்ட்).

தாராபுரம்: சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா (நாம் தமிழர்), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்).

ADVERTISEMENT