Page Loader
பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது

பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 23, 2025
02:55 pm

செய்தி முன்னோட்டம்

கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உலக வங்கியையும், பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான FATF குழுவையும் அணுக உள்ளது. ஜூன் மாதத்தில் பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை ஒப்புதலளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய உலக வங்கியிடம் இந்தியா கேட்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானை மீண்டும் அதன் grey லிஸ்டில்ல் சேர்க்க FATF-ஐ இந்தியா தீவிரமாக வலியுறுத்தும். இது பாகிஸ்தானின் நிதி பரிவர்த்தனைகள் மீதான ஆய்வை அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகளைக் கட்டுப்படுத்தும்.

வரலாறு

ஏற்கனவே Grey லிஸ்டில் சேர்க்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் பொருளாதாரம்

பாகிஸ்தான் ஜூன் 2018 இல் FATF 'Grey list'-இல் சேர்க்கப்பட்டது. இருப்பினும், பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2022 இல் அது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை சிறையில் அடைத்து சொத்துக்களைப் பறிமுதல் செய்ததாகவும் பாகிஸ்தான் கூறியது. மே 9 அன்று ஒரு நாடுகளுக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு வழங்கிய 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,500 கோடி) பிணை எடுப்புப் பொதியால் இந்தியா அரசாங்கம் ஏமாற்றமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.