Page Loader
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2025
09:55 am

செய்தி முன்னோட்டம்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக 6 நாள் விடுமுறை- ஜனவரி 14 முதல் 19 வரை விடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் 10ஆம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பதால், நேற்று மாலை முதல் சென்னை நோக்கி வாகனங்கள் வரத்துவங்கின. இதனால், பெருங்களத்தூர் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை வரை சாரைசாரையை வண்டிகள் வந்து கொண்டே இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்றங்கள் அறிவிப்பு

பெருங்களத்தூரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அங்கங்கே இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, காவல்துறையினர் சில முக்கிய சாலைகளில் கனரக வாகனங்களின் பயணத்தை தடைசெய்து, போக்குவரத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியுள்ளனர். பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை, கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இன்று காலையிலேயே சென்னையை நோக்கி பயணம் செய்கின்றனர், இதனால் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் அண்டை மாநிலங்களும் சென்னைக்கு வரும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது.