
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ஆளுநர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:
ஆளுநர் ஆர்.என்.ரவி,"அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள் புரிவாராக" என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்: அன்பு, அமைதி செல்வம் நிலைத்து நீடித்து இருக்கட்டும் என தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
embed
Twitter Post
Governor Thiru Ravi and Lady Governor Tmt. Laxmi Ravi, extended Deepawali greetings to the entire Raj Bhavan family, presenting Diyas and sweets.#Deepawali pic.twitter.com/1xR3HInTmC— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 30, 2024
தலைவர்கள் வாழ்த்து
அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து; திமுக வாழ்த்து மிஸ்ஸிங்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில்,"தித்திக்கும் இனிய தீபாவளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்" எனத்தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"மத்தாப்புக்களின் வெளிச்சம் போல இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்" எனக்கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,"இந்த தீபாவளி நாளில் நாம் அனைவரும் கேப்டனை நினைத்து வழிபடுவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்" எனக்கூறியுள்ளார்.
எனினும் திமுக தலைவர்கள் யாரும் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.