
'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், மே 23-28 க்கு இடையில் வங்காள விரிகுடாவில் ஒரு புயல் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் முஸ்தபா கமல் போலாஷ் எச்சரித்துள்ளார்.
இது இலங்கையால் முன்மொழியப்பட்ட பெயர்.
சக்தி புயல், மே 24-26 க்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும் என்றும், இந்தியாவின் ஒடிசா கடற்கரைக்கும், வங்கதேசத்தின் சட்டோகிராம் கடற்கரைக்கும் இடையிலான பகுதிகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மழை
இந்தியாவின் பல மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக IMD கணிப்பு
இதற்கிடையில், மே 16 முதல் 22 வரை கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று RMC வட்டாரங்களை மேற்கோள் காட்டி ABP பெங்காலி தெரிவித்துள்ளது.
இருப்பினும், புயல் உருவாவதை ஐஎம்டி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
எனினும், இந்த அமைப்புகளின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
மே 12 மற்றும் 14ஆம் தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ராயலசீமா, கடலோர ஆந்திரா & யானம், குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, சத்தீஸ்கர், துணை-இமயமலை மேற்கு வங்காளம் & சிக்கிம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கேரளா மற்றும் மாஹே, கர்நாடகாவின் உள்பகுதிகளிலும் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
தமிழகம்
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
திருப்பூர்
நீலகிரி
தேனி
திண்டுக்கல் நாளை (மே 14), கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், மே 15 அன்று, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை: 39°C வரை பதிவாகலாம் எனவும் கூறியுள்ளது.