Page Loader
கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று
ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடந்த டாணா புயல்

கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
09:03 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின் படி, 5 மணி நேரத்துக்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக கூறப்பட்டுள்ளது. இன்று காலை, புயல், ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கிடையில் கரையை கடக்கத் தொடங்கும் எனவும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறை காற்றுடன் புயல் கரையை கடக்க துவங்கியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

வலுவிழந்த சூறாவளி; மீட்பு பணிகளில் பேரிடர் குழு

இந்த புயல் தமரா மாவட்டத்திற்கு வடக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஒடிசாவிற்குள் மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நண்பகலுக்கு முன் "சூறாவளி" வலுவிழந்துவிடும். இதன் விளைவாக, "கடுமையான சூறாவளி" மேற்கு வங்கத்தில் நுழையாது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரவு 12 மணி அளவில், ஒடிசாவின் வடக்கு கடற்கரை பகுதியில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. அதில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இந்திய கடற்படை புயல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.