பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள்
இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைத்தார். புதிய நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாக குடியரசு தலைவர் வருகை புரிவதால், அவர் முன், செங்கோல் எடுத்து செல்லப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய திரௌபதி முர்மு,"புதிய நாடாளுமன்றத்தில் இதுதான் என்னுடைய முதல் உரை. இந்த உரை அமிர்த காலத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதன்மூலம் வறுமையில் வாடி வந்த 25 கோடி பேர் கைதூக்கி விடப்பட்டுள்ளனர்" என கூறினார்.
ராமர் கோவில், சட்டப் பிரிவு 370ஐ பற்றி பேசிய குடியரசு தலைவர்
"தொழில்துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக மாறியிருக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் அணுகுமுறையை சர்வதேச அளவில் கொண்டாடி வருகின்றனர். பல நூறு ஆண்டுகால கனவாக இருந்த ராமர் கோயில் கட்டுமானத்தை மத்திய அரசு நிறைவேற்றி காட்டி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்து மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி பிறந்திருக்கிறது" என முர்மு குறிப்பிட்டார். "புதிதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பிராண்ட்பேண்ட் சேவை 14% அதிகரித்துள்ளது. 1,200 கோடி யுபிஐ பணப் பரிவர்த்தனைகளை இந்தியர்கள் செய்திருக்கின்றனர்". "மேக்-இன் இந்தியா, ஆத்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்கள் நம்முடைய பலமாக பார்க்கப்படுகிறது" என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் உரை
செங்கோலுடன் வரவேற்கப்பட்ட குடியரசு தலைவர்
#WATCH | Budget Session | President Droupadi Murmu arrives at the Parliament for her address to the joint session of both Houses. Sengol carried and installed in her presence. pic.twitter.com/vhWm2oHj6J— ANI (@ANI) January 31, 2024