அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை; மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடுகள், ஏற்பாடுகள் என இதுவரை நடந்தவை
நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய நேரத்தில் அவர் தப்ப முயன்றதால், இடது கை மற்றும் கால் முறிந்தது என இன்று காலை தகவல் வெளியானது. அவர் மீது FIR-உம் பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் கைதானவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை எழுப்ப, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த நேரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தவை:
மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்து,மிரட்டி, மாணவியை பாலியல் துன்புறுத்தல்
கடந்த 23-ம் தேதி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இரவு 8 மணியளவில் 2-வது ஆண்டு பொறியியல் மாணவி மற்றும் 3-வது ஆண்டு மாணவர் ஒருவர், நடைபயிற்சி மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் அவர்களது உரையாடலை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டினார். பின்னர், அந்த நபர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புர காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
விவகாரம் பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள இந்த தருணத்தில் அண்ணா யூனிவர்சிட்டி வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் காலேஜ், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கிரோம்பேட்டை MIT ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் யாருக்கும் 6:30 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதியில்லை, மாணவர்கள் அனைவரும் வளாகத்தில் இருக்கும்போது கட்டாயம் ID கார்டு அணிய வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Twitter Post
ஆளும் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின
பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக அரசு மற்றும் திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினர், திமுக நிர்வாகி என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்யப்பட்டவரை பொறுப்புக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவம் தொடர்பான புகாரின் FIR வெளியில் பகிரப்பட்டதை கண்டித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த FIR காப்பியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றிருந்ததையும் கண்டித்தார். இதில், திமுக மற்றும் தமிழக காவல்துறை செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.