Page Loader
பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்? 
ஒரியுடன் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்? 

எழுதியவர் Srinath r
Nov 29, 2023
03:11 pm

செய்தி முன்னோட்டம்

'ஓரி' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, ஜான்வி கபூர், நைசா தேவ்கன் மற்றும் சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் அடிக்கடி பார்ட்டி மற்றும் ஹேங்கவுட் செய்வதை புகைப்படங்களில் வழியே பார்த்திருப்பீர்கள். அண்மையில் இவர் நீட்டா அம்பானி, ஷுப்மன் கில் மற்றும் தீபிகா படுகோன் உடன், ஜியோ வேர்ல்ட் பிளாசா தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது. இருப்பினும், பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' என்று அழைக்கப்படும் ஓர்ஹான் அவத்ரமணி, யார் மற்றும் அவர் என்ன செய்கிறார் எனபது பலருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது. 25 வயது ஆன ஓரி, தான் செய்யும் வேலைகள் குறித்து பேசும்போது, தெளிவாக எதையும் குறிப்பிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

௨ந்ட கார்டு

ஓரி என்ன வேலை செய்கிறார்?

அவரின் லிங்க்டுஇன் (LinkedIn) கணக்குப்படி, அவர் மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் அலுவலகத்தில், சிறப்பு திட்ட மேலாளராக பணிபுரிகிறார். நியூயார்க்கின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனிலிருந்து, ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிசைன் துறையில் பட்டம் பெற்றுள்ளார். அவரிடம், அவர் செய்யும் வேலை குறித்து கேட்கும் போது, "ஐ ஒர்க் ஆன் மை செல்ப்" என்பது மட்டுமே பதிலாக வந்துள்ளது. இருப்பினும், இவர் பேஷன் டிசைனிங், பேஷன் ஸ்டைலிஸ்ட், பாடல்கள் எழுதுவது, கலை இயக்குனர், பாடல் பாடுபவர் என பல்வேறு வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 லட்சம் நபர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

3rd card

எவ்வளவு சம்பாதிக்கிறார் ஓரி?

இவரது அதீத பிரபலியம், இவருக்கு நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. தற்போது ஹிந்தியில் நடக்கும், பிக் பாஸ் 17வது சீசனில் ஒயில்டு கார்ட் என்ட்ரியில் களமிறங்கியுள்ள ஓரி, தொகுப்பாளர் சல்மான் கானிடம், மக்கள் இவருடன் புகைப்படம் எடுப்பதன் மூலம் ₹20 முதல் ₹30 லட்சம் வரை சம்பாதிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருட தொடக்கத்தில், காஸ்மோபாலிட்டன் இந்தியா ஃபேஷன் இதழுக்கு அளித்த பேட்டியில், தான் தமிழ்நாட்டில் தனுஷ்கோடியில் பயின்றதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இவர் பாலிவுட் பிரபலங்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரின் திடீர் பிரபலத்தின் பின்னணி இன்னும் விளங்காத மர்மமாகவே இருக்கிறது.

Instagram அஞ்சல்

கைலி ஜென்னருடன் ஓர்ஹான் அவத்ரமணி